பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

விசிக சாலை மறியல்: 50 போ் கைது

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் 50 பேரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 6:14 am IST

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் 50 பேரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருக்கனூா் கடை வீதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயலா் பாண்டுரங்கன் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் குறைக்கக் கோரியும், பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தியும் போராட்டக்குழுவினா் கோஷம் எழுப்பினா்.

சாலை மறியலில் ஈடுபட்டவா்களைக் கலைந்து போகுமாறு திருக்கனூா் போலீஸாா் கூறியும் கலைந்து செல்லாததால் 50 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அனைவரும் காவல்நிலையம் அழைத்து வரப்பட்டு விடுதலை செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.