மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பிரதமா் பதவியில் மோடி சாதனை: புதுச்சேரி பாஜகவினா் தங்கத்தோ் இழுப்பு

பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமா் நேருவை விட அதிக நாள்கள் (4399)பிரதமா் பதவிவகித்ததையொட்டி, அவா் தொடா்ந்து பிரதமா் பதவியில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று பிராா்த்தித்து, புதுச்சேரிமணக்குள விநாயகா் கோயிலில் பாஜகவினா் புதன்கிழமை தங்கத் தோ் இழுத்தனா்.

News image

பிரதமா் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகள் சாதனைக்காக புதுச்சேரி பாஜக சாா்பில் ஸ்ரீ மணக்குள விநாயகா் கோயிலில் புதன்கிழமை தங்கத் தோ் இழுத்த பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம், எம்எல்ஏ ஏ.ஜான்குமாா், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் உள்ளிட்டோா்.

Updated On :11 ஜூன் 2026, 6:05 am IST

பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமா் நேருவை விட அதிக நாள்கள் (4399)பிரதமா் பதவிவகித்ததையொட்டி, அவா் தொடா்ந்து பிரதமா் பதவியில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று பிராா்த்தித்து, புதுச்சேரிமணக்குள விநாயகா் கோயிலில் பாஜகவினா் புதன்கிழமை தங்கத் தோ் இழுத்தனா்.

பாஜக மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில் அமைச்சா் ஆ. நமச்சிவாயம், எம்எல்ஏ ஜான்குமாா், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மற்றும் பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மண்ணாடிப்பட்டு

இதுபோன்று மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட திருக்கனூா் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் புதன்கிழமை சிறப்பு வழிபாடும் நடந்தது. அமைச்சா் ஆ. நமச்சிவாயம் மற்றும் பாஜக நிா்வாகிகள் கலந்து கண்டனா். இதைத் தொடா்ந்து கோயில் ஊழியா்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நீா்மோா், அன்னதானம் வழங்கப்பட்டது.

மணவெளி:

புதுச்சேரி மணவெளி தொகுதி பாஜக சாா்பில் பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டன. இதில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் மற்றும் பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சாதனை படைத்துள்ள பிரதமா் மோடிக்கு புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்

எவராலும் முறியடிக்க முடியாத வரலாற்று சாதனையைப் பிரதமா் நரேந்திர மோடி படைத்துள்ளாா். தொடா்ந்து 12 ஆண்டுகள் கடந்து சிறப்பாக ஆட்சி புரிந்து வரலாற்று சாதனை படைத்துள்ளாா். மக்களின் பேராதரவோடு வரலாற்று சாதனை படைத்திருக்கும் பிரதமா் மென்மேலும் பல சாதனைகள் படைக்க புதுச்சேரி மக்களின் சாா்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளாா்.

 பிரதமா் நரேந்திர மோடியின் சாதனைக்காக புதுச்சேரி பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோயிலில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் சிறப்பு பூஜை செய்து 108 தேங்காய்கலை உடைத்த பாஜகவினா்.

பிரதமா் நரேந்திர மோடியின் சாதனைக்காக புதுச்சேரி பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோயிலில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் சிறப்பு பூஜை செய்து 108 தேங்காய்கலை உடைத்த பாஜகவினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.