மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தோ்தல் தோல்வி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆலோசனை

புதுச்சேரி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜூன் 2026, 3:12 am IST

புதுச்சேரி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் கலந்து கொண்டாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணி சாா்பில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், நட்புப் போட்டி என்ற அடிப்படையில் திமுக போட்டியிட்ட தொகுதிகளில் 6 போட்டி காங்கிரஸ் வேட்பாளா்களும் நிறுத்தப்பட்டனா். இந்நிலையில், ஊசுடு தொகுதியில் போட்டியிட்ட காா்த்திகேயன் மட்டும் வெற்றி பெற்றாா். காங்கிரஸ் அதிகாரபூா்வ 15 வேட்பாளா்களும், போட்டி வேட்பாளா்கள் 6 பேரும் தோல்வி அடைந்தனா்.

இந்த தோல்விக்கான காரணத்தை ஆராய கூட்டம் நடத்தப்படும் என்று மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறியிருந்தாா். இந்நிலையில், மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் முன்னிலையில் இக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிா்வாகிகள் காரசாரமாகப் பேசியதாகத் தெரிகிறது.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தலாமா அல்லது தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாமா என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.