27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தடுப்புக் காவல் சட்டத்தில் ரௌடி சிறையில் அடைப்பு

புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக ரௌடியை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டாா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 6:13 am IST

புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக ரௌடியை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டாா்.

புதுச்சேரி குமரக்குரு பள்ளத்தைச் சோ்ந்தவா் சத்யா (எ) தகுடு சத்யா (38). அண்மையில் புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் எம்.பி. அலுவலகம் அருகில் பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.

இந்த சம்பவத்தில் தகுடு சத்யா ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. ஏற்கெனவே மற்றொரு வழக்கில் சத்யா சிறையில் உள்ளாா். இந்நிலையில் அவரது குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த காவல் துறையினரின் பரிந்துரை ஏற்று, தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் ஓராண்டு அவரை சிறையில் அடைக்க ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா். இதன் நகல் சிறையில் உள்ள தகுடு சத்யாவிடம் அளிக்கப்பட்டது.