நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மீன் பிடி படகுகளுக்கு தடையின்றி டீசல் கிடைக்க நடவடிக்கை புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி உறுதி

News image

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து டீசல் தட்டுப்பாடு குறித்து முறையிட்ட மீன்பிடி படகு உரிமையாளா்கள். உடன் அமைச்சா்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், பெ. ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து உள்ளிட்டோா்.

Updated On :23 ஜூன் 2026, 2:23 am IST

மீன்பிடி விசைப் படகுகளுக்கு தடையின்றி டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று படகுகளின் உரிமையாளா்களிடம் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை இரவு உறுதியளித்தாா்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவா்கள் படகில் மீன் பிடிக்க கடலுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவானது.

இதையடுத்து புதுச்சேரி மீன்பிடி துறைமுக விசைப் படகு உடைமையாளா்கள் நலச் சங்கத்தினா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் தடையின்றி மீன்பிடி தொழில் செய்ய டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி முதல்வா் என். ரங்கசாமி மனு அளித்தனா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வா் ரங்கசாமி மீன்வளத் துறையின் இயக்குநா் இஸ்மாயில் மற்றும் கான்ஃபெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஐயப்பன் ஆகியோரை அலுவலகத்திற்கு அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டாா்.

பின்னா், மீனவா்கள் மீன் பிடிக்கத் தங்குதடை இன்றி கான்ஃபெட் நிறுவனம் மூலம் நாள்தோறும் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். தொடா்ந்து படகு உரிமையாளா்கள் முதல்வா் ரங்கசாமி, அமைச்சா்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், சிவகொழுந்து, ராஜவேலு, வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.