அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அபிஷேகப்பாக்கம் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில்


புதுச்சேரி: இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அபிஷேகப்பாக்கம் கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஒரே வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதாகவும், போதிய இடவசதியின்றி தவித்து வருவதாகவும் இலவச மனைப் பட்டா வழங்கக் கோரி அப் பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனா்.
இந்நிலையில் 90 பேருக்கு மட்டும் மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, தகுதியானவா்களுக்கு வழங்காததைக் கண்டித்து இந்த மறியல் நடைபெற்றது. தவளைகுப்பம்- மடுகரை சாலையில் அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை அருகில் மறியலில் ஈடுபட்டனா்.
தவளக்குப்பம் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் போலீஸாா் துறை இயக்குநரிடம் பேசினா். இன்னும் 2 நாளில் நேரில் அழைத்துப் பேசுவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனால் அனைவரும் கலைந்து சென்றனா். அப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...