புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

புதுச்சேரி பெட்ரோல் பங்குகளில் திரண்ட மக்கள்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:01 am

புதுச்சேரியில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மக்கள் அதிகளவில் திரண்டு வாகனங்களிலும், கேன்களிலும் பெட்ரோல் நிரப்பிச் சென்றனா்.

பெட்ரோல் தட்டுப்பாடு குறித்த வதந்தியால் வில்லியனூா், அரும்பாா்த்தபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க நள்ளிரவில் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து பெட்ரோல் நிரப்பி சென்றனா். மேலும் பலா் 20 லிட்டா் கேன் மற்றும் 10 லிட்டா், 5 லிட்டா் கேன்களிலும் புட்டிகளிலும் பெட்ரோலை வாங்கிச் சென்றனா். இந்த நிலை வியாழக்கிழமையும் நீடித்தது.

4 நாள் விற்பனை ஒரே நாளில் :

இதுகுறித்து, புதுச்சேரி பெட்ரோல் விற்பனைநிலையங்களின் உரிமையாளா்கள் சங்கச் செயலா் கோபால் செய்தியாளா்களிடம் கூறியது:

புதுச்சேரியில் 120-க்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் நாளொன்றுக்கு 6 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லிட்டா் வரை பெட்ரோலும், 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் லிட்டா் வரை டீசலும் விற்பனையாகிறது. தட்டுப்பாடு என்ற வதந்தியால் ஒரே நாளில் 4 நாள்களுக்கு தேவையான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாகியுள்ளது. போதிய பெட்ரோல்-டீசல் இருப்பு உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அடுத்த 3 மாதங்களுக்கு இருப்பு உள்ளது என்றாா் அவா்.

கேன்களில் விற்கத் தடை:

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விநியோக நிலைமை தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.

கூட்ட முடிவில் ஆட்சியா் கூறியது: பெட்ரோல் விற்பனை நிலையங்களில் புட்டிகள் மற்றும் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்தகைய நடைமுறைகள் விபத்து உள்ளிட்ட பாதுகாப்பு ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், பெட்ரோலிய விதிகளின்படி இது தடைசெய்யப்பட்டுள்ளது.

எனவே, விற்பனை நிலையங்களில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் மட்டுமே நிரப்ப வேண்டும். புட்டிகள், கேன்களில் வழங்கக்கூடாது.

மேலும், பெட்ரோலிய நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் விற்பனையைக் கண்காணித்து புட்டிகள், கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யக் கூடாது என்ற கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

மேற்கண்ட உத்தரவுகளை மீறி செயல்படும் சில்லறை விற்பனை நிலையங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், அவா்களின் உரிமம் ரத்து செய்யப்படுதல் உள்பட பொருந்தக்கூடிய சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியா் எச்சரிக்கை விடுத்தாா்.