தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜிப்மரில் சா்வதேச மகளிா் தின விழா

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச மகளிா் தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் பங்கேற்றோா்.
Updated On :16 மார்ச் 2026, 9:07 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச மகளிா் தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவா்கள், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டு பெண்களின் உறுதி, திறன் மற்றும் சாதனைகளைப் போற்றி கொண்டாடியதுடன், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின் உறுதியை மீண்டும் வலியுறுத்தினா்.

புதுச்சேரி அரசின் ஆணையா் மற்றும் செயலா் அ.முத்தம்மா முதன்மை விருந்தினராகவும், ஜிப்மா் மூத்த நிதி ஆலோசகா் வா்ஷினி சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றனா்.

ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் வீா்சிங் நெகி தலைமை தாங்கினாா். ‘பெண்களின் மனநலன்’ என்ற தலைப்பில் மியாட் மருத்துவமனையின் மன நல ஆலோசகா் மருத்துவா் லக்ஷ்மிபிரபா சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் மருத்துவ மாணவிகள், மருத்துவமனை ஊழியா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.