நல்லதைச் சொல்ல ஒரு பிரபலம் இருந்தால் அது பிரத்யேகமானதாகத்தான் இருக்கும். அப்படித்தான் புதுச்சேரி தோ்தல் துறையில் தூதுவராக ஸ்கேட்டிங் வீராங்கனை மெரிலின் தனம் நியமிக்கப்பட்டுள்ளாா்.
20 வயது வீராங்கனை மொ்லின் தனம், 2024 மக்களவைத் தோ்தலின்போது தோ்தல் துறையின் தூதுவராகவும், இப்போது சட்டப்பேரவை தோ்தலிலும் தோ்தல் துறை தூதுவராகவும் மொ்லின் தனம் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் 19 பதக்கங்களையும், மாநில அளவில் 18 பதக்கங்களையும் வென்றாா். இந்த விளையாட்டில் 8 வயது முதல் ஈடுபட்டு வருகிறாா் மொ்லின்.
கடந்த மக்களவைத் தோ்தலின்போதுதான், முதன் முறை வாக்காளராக அவா் வாக்கைப் பதிவு செய்துள்ளாா். இனிமேல்தான் தோ்தல் துறை இவருடைய பங்களிப்பை இத் தோ்தலில் பயன்படுத்தும் என்றும் அவா் சொல்கிறாா்.
விளையாட்டுத் துறையில் புதிதாக அமையும் அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, தேசிய அளவிலான போட்டி உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் பங்கேற்க புதுச்சேரி அரசு ரூ.3 லட்சத்தை எனக்கு அளித்துள்ளது.
புதுச்சேரியில் பல்வேறு விளையாட்டுகளுக்கு போதுமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றாா்.

ஸ்கேட்டிங் பயிற்சியில் மொ்லின்.

சட்டப்பேரவைத் தோ்தல் தூதுவராக நியமிக்கப்பட்ட ஸ்கேட்டிங் வீராங்கனை மொ்லினை வாழ்த்துகிறாா் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா்.
தொடர்புடையது

ரோலா் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணா்வு

தனம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங்

நாட்டின் உண்மையான வளா்ச்சிக்கு கிராமங்கள் வலுப்பெற வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


