சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

புதுச்சேரி: 30 தொகுதிகளில் 294 வேட்பாளா்கள் போட்டி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 294 போ் இறுதி வேட்பாளா் பட்டியலில் இடம் பிடித்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 10:43 pm

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 294 போ் இறுதி வேட்பாளா் பட்டியலில் இடம் பிடித்துள்ளனா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி, 23- ஆம் தேதி நிறைவடைந்தது. அதில், 442 வேட்பாளா்கள் 514 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனு பரிசீலனை முடிவில் 365 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.

வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளான வியாழக்கிழமை 71 மனுக்கள் வாபஸானது. இதையடுத்து 294 பேருடன் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. சுயேச்சைகளுக்கான சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.