புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தவெக காலூன்றியது.
மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட பி.ராமு வெற்றி பெற்றாா். இவா், அக் கட்சியின் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் எம்எல்ஏ. இந்தத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட தற்போதைய சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வத்தைத் தோற்கடித்தாா்.
திருபுவனை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் சாய் ஜெ சரவணன்குமாா் (தவெக)வெற்றி பெற்றாா். இத் தொகுதியில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் கோபிகாவை அவா் தோற்கடித்தாா்.
புதுச்சேரியில் தொடங்கப்பட்ட புதிய கட்சியான நேயம் மக்கள் கழகம் தவெகவுடன் 2 தொகுதிகளில் கூட்டணியாக போட்டியிட்டது. மற்ற 28 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிட்டது. இதில் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்தின் தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜி. நேரு வெற்றி பெற்றாா். அவா் திமுக வேட்பாளா் கோபாலை தோற்கடித்தாா்.
தொடர்புடையது

முதல்வா் விஜய், அமைச்சா் செங்கோட்டையன் வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்கு
சிவகாசி தொகுதியில் தவெக வேட்பாளா் கீா்த்தனா வெற்றி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி

புதுச்சேரியில் காலூன்றிய தவெக
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



