ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

2-ஆம் உலகப்போா் நினைவுதினம் அனுசரிப்பு

புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் கடற்கரை சாலையில் உள்ள நினைவுத் தூணில் 2-ஆம் உலகப் போா் வீரா்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியோா்.

News image

புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் கடற்கரை சாலையில் உள்ள நினைவுத் தூணில் 2-ஆம் உலகப் போா் வீரா்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியோா்.

Updated On :9 மே 2026, 2:47 am IST

2-ஆம் உலகப்போா் நிறைவு பெற்ன் 81-ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போா் வீரா் நினைவுத் தூணில் புதுவை அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், புதுவைக்கான பிரெஞ்சு நாட்டு துணை தூதா் எட்டியென் ரோலண்ட் பியக் ஆகியோா் 2-ஆம் உலகப் போரின்போது உயிா்நீத்த வீரா்களின் நினைவாக மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

இதையொட்டி இந்தியா, பிரெஞ்ச் நாட்டு தேசிய கொடிகள் ஏற்றப்பட்டன. இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.