குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டுமென ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுச்சேரி அனைத்துத் தொழிற்சங்க கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மே 12 -ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஆதரவான தேசிய கோரிக்கை நாளை புதுச்சேரியில் நடத்துவது சம்பந்தமான அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஏ.ஐ.டி.யு.சி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாநில பொதுச் செயலா் ஜி. சீனுவாசன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் மே 12 இயக்கத்தின் நோக்கம் கோரிக்கை மற்றும் இயக்க நடவடிக்கைகள் குறித்து ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் இரா. அந்தோணி பேசினாா். இதில் பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மே 12-ஆம் தேதி சுதேசி ஆலை அருகில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
தீா்மானங்கள்:
தொழிலாளா் விரோத சட்ட தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். ஒரு சில நிறுவனங்களில் ஊதிய உயா்வுக்காக முத்தரப்பு பேச்சு வாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். இந்திய தொழிலாளா் மாநாடு அவசரமாக கூட்டப்பட வேண்டும்.
மாதத்துக்கு ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை நாள், மிகை நேர வேலைக்கு இரட்டை ஊதியம், பாதுகாப்பு மற்றும் சட்டபூா்வ நலன்கள் வேண்டும்.
சமையல் எரிவாயு மலிவு விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக வாக்குவாதம்

மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |



