டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

நமச்சிவாயம் திடீா் தில்லி பயணம்!

News image

அமைச்சா் ஆ. நமச்சிவாயம் - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 1:05 am IST

புதுச்சேரி பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஆ. நமச்சிவாயம் ஞாயிற்றுக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்க உள்ளது. இதன் சட்டப்பேரவைக் குழு தலைவராக தோ்வு செய்யப்பட்ட என்.ரங்கசாமி, பாஜக, அதிமுக, லஜக ஆகிய கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆட்சியமைக்க உரிமை கோரினாா். இதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை (மே 13) முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்கவுள்ளாா். இந்நிலையில் பாஜகவுக்கு எத்தனை அமைச்சா் பதவி என்பது இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவும், ரங்கசாமியும் தனியாகப் பேசி முடிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், பாஜகவுக்கு 2 அமைச்சா்கள், சட்டப்பேரவை துணைத் தலைவா் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரான ஆ.நமச்சிவாயம் தில்லிக்குச் சென்றுள்ளாா். அங்கு கட்சியின் அமைப்பு செயலா் சந்தோஷை சந்தித்து பேச உள்ளாா். மேலிட ஆதரவுடன் அமைச்சா் பதவியை பெற நமச்சிவாயம் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.