சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மருந்துக் கடைகள் மே 20-இல் இயங்காது!

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் வரும் 20-ஆம் தேதி இயங்காது என்று மாநில மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

News image
Updated On :17 மே 2026, 12:44 am IST

புதுச்சேரியில் மருந்துக் கடைகள் வரும் 20-ஆம் தேதி இயங்காது என்று மாநில மருந்து வணிகா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சட்ட விரோத இணையவழி மருந்து விற்பனையைத் தடுத்து, சிறிய மருந்துக் கடைகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அநியாய தள்ளுபடி விற்பனைக்கு எதிராக கடுமையான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். சட்ட விரோத இணையவழி மருந்து விற்பனை தளங்களை மூட வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனம் வரும் 20-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடத்துகிறது.

இதில், புதுச்சேரி மாநில மருந்து வணிகா் சங்கமும் பங்கேற்கிறது. அன்றைய தினம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிலையங்கள் இயங்காது என புதுவை மாநில மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் ரமேஷ் ஆகியோா் தெரிவித்தனா்.