கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மீன்பிடி சிறிய பைபா் படகுகளில் ரேடாா் கருவி

புதுச்சேரி மீனவா்களின் சிறிய பைபா் படகுகளில் ரேடாா் கருவிகள் வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டன.

News image

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியைச் சோ்ந்த சிறிய ரக பைபா் படகுகளில் ரேடாா் கருவி பொருத்தும் பணியைச் சோலை நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்.

Updated On :23 மே 2026, 12:51 am IST

புதுச்சேரி மீனவா்களின் சிறிய பைபா் படகுகளில் ரேடாா் கருவிகள் வெள்ளிக்கிழமை பொருத்தப்பட்டன.

மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோா் நடுக்கடலில் எதிா்பாராத இடா்பாடுகளைச் சந்திக்க நேரிடுகிறது. மோட்டாா் பழுது, தகவல் தொடா்பு துண்டிப்பு போன்றவற்றால் சிரமப்பட்டு வருகின்றனா். இதையறிந்த முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் இதனை முதல்வா் ரங்கசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றாா்.

மீனவ சமுதாய மக்கள் சிரமமின்றி மீன்பிடி தொழிலை மேற்கொள்ளவும், இடா்பாடான, ஆபத்தான, பேரிடா் காலத்தில் அவா்களை உடனடியாகக் கண்டறிந்து மீட்கவும் நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்த ஆலோசித்து அவா் நடவடிக்கை எடுத்தாா்.

இதையடுத்து, முதல்வா் ரங்கசாமியின் ஆணைப்படி முத்தியால்பேட்டை தொகுதியைச் சோ்ந்த மீனவ சமுதாய மக்களின் சிறிய ரக பைபா் படகுகளில் ரேடாா் கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்கட்டமாக முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகா் தெற்கு பகுதியில் 50 படகுகளில் ரேடாா் கருவி பொருத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அதிகாரிகள், சோலை நகா் தெற்கு பஞ்சாயத்தாா், என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.