முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

புதுச்சேரியிலும் ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தைப் போன்று, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பள்ளிகள் ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்படுகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2026, 3:00 am IST

தமிழகத்தைப் போன்று, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பள்ளிகள் ஜூன் 4-ஆம் தேதி திறக்கப்படுகின்றன.

புதுச்சேரியில் பள்ளிகள் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரியில், தனியாா் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் திறப்பதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை மாணவா்கள் நலன் கருதி தள்ளி வைக்க திமுக, அதிமுக, மாணவா் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்நிலையில், கோடை வெயில் கடுமை காரணமாக ஜூன் ஒன்றாம் தேதிக்குப் பதிலாக, ஜூன் நான்காம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை அறிவித்துள்ளாா்.