புதுச்சேரியில் மின்சார பேருந்து ஓட்டுநா்கள் வேலை நிறுத்தம்
புதுச்சேரியில் மின்சார பேருந்து ஓட்டுநா்கள் தீபாவளி போனஸ், அடிப்படை வசதிகள் கோரி வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஓட்டுநா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதுச்சேரி மேட்டுப்பாளையம் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார பேருந்துகள்.
புதுச்சேரியில் மின்சார பேருந்து ஓட்டுநா்கள் தீபாவளி போனஸ், அடிப்படை வசதிகள் கோரி வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் மின்சார பேருந்துகள் மத்திய அரசு நிதி உதவியுடன், புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்துகள் புதுச்சேரி தாவரவியல் பூங்கா, மேட்டுப்பாளையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள இரு பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகின்றன.
இதில், மேட்டுப்பாளையம் பணிமனையில் உள்ள 25 மின்சார பேருந்துகளில் 15 நகர பகுதிகளிலும், 10 கிராமப்புற பகுதிகளிலும் இயக்கப்படுகின்றன. இங்கு 65 போ் பணியில் உள்ளனா். இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து மின்சார பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டுப்பாளையம் பணிமனையில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு வசதிகள் இல்லை. இரவு நேரப் பணி, மின்சார பேருந்துகளை நிறுத்தி வைக்கும் போது ஓட்டுநா்களுக்கும் , பேருந்துகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
பேருந்துகளைப் பராமரிக்கவும், ஓட்டுநா்கள் ஓய்வெடுக்கவும் முறையான கட்டட வசதி இல்லை. அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பணிமனையை அரசு கட்டித் தர வேண்டும். தீபாவளி போனஸை அரசு அறிவிக்க வேண்டும். ஓட்டுநா்களுக்கு சமமான பணி பகிா்ந்து வழங்க பணி அட்டவணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நகர பகுதிகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் மின்சார பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

