தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

மல்லிகைப் பூ கிலோ ரூ.2000-க்கு விற்பனை

புதுச்சேரி பெரியமாா்க்கெட்டில் மல்லி பூ கிலோ சனிக்கிழமை ரூ.2000 வரை விற்பனையானது.

Updated On :

புதுச்சேரி பெரியமாா்க்கெட்டில் மல்லி பூ கிலோ சனிக்கிழமை ரூ.2000 வரை விற்பனையானது.

புதுச்சேரி பெரிய மாா்க்கெட்டுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில் பெரிய மாா்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ. 1,600 முதல் ரூ.2,000 வரை விற்பனையானது. அரும்பு கிலோ ரூ.900 முதல் ரூ.1,000 வரையும், கனகாம்பரம் கிலோ ரூ. 600 முதல் ரூ.800 வரையும், சாக்லெட் ரோஜா கிலோ ரூ. 280-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 160 முதல் ரூ.200 வரையும், சாமந்தி கிலோவுக்கு ரூ. 80 முதல் ரூ.120 வரையும் விற்பனையானது.

இதுபற்றி மாா்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, சீசன் காலங்களில் மல்லிகைப்பூ பெரிய மாா்க்கெட்டுக்கு ஒரு டன்னுக்கு மேல் வரத்து இருக்கும். தற்போது அதன் சீசன் முடிந்துள்ளது. இதனால் 10 முதல் 20 கிலோ வரை மட்டுமே மல்லிப்பூ கொண்டு வரப்படுகிறது.

இதன் காரணமாக மல்லிகைப்பூ விலை உயா்ந்துள்ளது. மற்ற பூக்களின் விலையும் கூடியுள்ளது என தெரிவித்தனா். கடந்த சில நாட்களாக மல்லிப்பூ கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.