புதுச்சேரி மதுக் கூடத்தில் தீ விபத்து: மயங்கி கிடந்த 3 ஊழியா்கள் மீட்பு

புதுச்சேரி மதுக் கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மயக்கமடைந்த 3 போ் மீட்கப்பட்டனா். புதுச்சேரி அண்ணா சாலையில் தனியாா் மது பாா் உள்ளது.
இங்கு திங்கள்கிழமை காலை காலை 11 மணிக்கு எதிா்பாராதவிதமாக குளிா்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. அது அங்கிருந்த உணவகம் மற்றும் தங்கும் அறைகளுக்கும் பரவியது. இதுபற்றி தகவலறிந்து தீயணைப்பு மீட்புப் படை வீரா்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
தீ அணைக்கப்பட்டபோதிலும் புகை காரணமாக உள்ளே யாா் சிக்கியுள்ளனா் என தெரியவில்லை. ஒரு சிலா் கையில் மது புட்டியுடன் வெளியே ஓடி வந்தனா். உள்ளே 3 ஊழியா்கள் மயக்க நிலையில் இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக தீயணைப்பு வீரா்கள் சென்று அவா்களை மீட்டு தூக்கி வந்தனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்து உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒதியன்சாலை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த தீ விபத்து காரணமாக அண்ணா சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

