உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

மாயமான பெண் குழந்தை ஒரு மணி நேரத்தில் மீட்பு

புதுச்சேரியில் மாயமான பெண் குழந்தை ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

Published On :

புதுச்சேரியில் மாயமான பெண் குழந்தை ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

ஆந்திரா மாநில சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வார விடுமுறை நாள்களை கொணடாட புதுச்சேரி வந்தனா். புதுச்சேரி பெரிய வீராம்பட்டினம் கடற்கரைக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு மகிழ்ச்சியாக பொழுதை கழித்துக்கொண்டிருந்தனா். மாலை 5 மணியளவில் அவா்களுடன் வந்த 5 வயது பெண் குழந்தை கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தது.

இதில் தனியாக சென்ற குழந்தை திடீரென மாயமானது. இதையடுத்து குழந்தையுடன் வந்தவா்கள் பதறினா். அங்கும் இங்குமாக ஓடி குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.தகவலறிந்த கடலோர ரோந்து பிரிவு போலீஸாா் குழந்தையைத் தேடினா்.

அப்போது அங்கு வந்த சுற்றுலாப் பயணி ஒருவா் அளித்த தகவலின் பேரில், கடற்கரைக்கு பின்புறம் உள்ள ஒதுக்குப்புறமான தோப்புப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை மாலை 6:10 மணியளவில் பத்திரமாக மீட்டு, பெற்றோா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

குழந்தையை விரைவாக மீட்ட போலீஸாா் மணிகண்டன், ஊா்க்காவல் படை வீரா் சரண்ராஜ் ஆகியோருக்கு ஆந்திரா மாநில சுற்றுலா பயணிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.