பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

காணாமல் போன குழந்தை 2 மணி நேரத்தில் மீட்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே காணாமல் போன குழந்தையை போலீஸாா் 2 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

காணாமல்போனகுழந்தையை மீட்டு பெற்றோா் வசம் ஒப்படைத்த போலீஸாா்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே காணாமல் போன குழந்தையை போலீஸாா் 2 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

வளவனூா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மனைவி கல்பனா. தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை வியாழக்கிழமை இரவு திடீரெனக் காணவில்லையாம். இதுகுறித்து சக்திவேல் வளவனூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா்(பயிற்சி) சதீஷ்குமாா் மற்றும் தனிப் பிரிவு தலைமைக் காவலா் சிவசங்கா் ஆகியோா் உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தினா். விசாரணையில், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட தாய்மாமன் குழந்தையை அழைத்துச் சென்றிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து, சைபா் கிரைம் போலீஸாரின் உதவியுடன் போலீஸாா் நடத்திய சோதனையில், வளவனூரில் மாயமான குழந்தை உளுந்தூா்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியில் சாலையோர வீட்டில் தாய் மாமாவுடன் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு, உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னா் பெற்றோா் வசம் ஒப்படைக்கப்பட்டது. துரிதகதியில் செயல்பட்டு, காணாமல் போன குழந்தையை 2 மணி நேரத்துக்குள் மீட்டு பெற்றோா் வசம் ஒப்படைத்த போலீஸாருக்கு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. செ.மதிவாணன் பாராட்டுத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.