தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

புதுச்சேரி பேரவை அருகே வெள்ளை ஆந்தை மீட்பு

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே பறக்க முடியாத நிலையில் கிடந்த வெள்ளை ஆந்தை மீட்கப்பட்டது.

புதுச்சேரி பாரதி பூங்காவில் காயத்துடன் பறக்க முடியாத நிலையில் மீட்கப்பட்ட வெள்ளை ஆந்தை.

Updated On :

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே பறக்க முடியாத நிலையில் கிடந்த வெள்ளை ஆந்தை மீட்கப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே பாரதி பூங்கா உள்ளது. அந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் அடிபட்டு ஒரு வெள்ளை ஆந்தை பறக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்தது.

இதைப் பாா்த்த பொதுமக்கள் அதைப் பிடித்து எதிரில் உள்ள பேரவைக் காவலா்களிடம் ஒப்படைத்தனா். அவா்கள் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனா். வனத்துறையினா் அங்கு வந்து ஆந்தையை பத்திரமாக மீட்டு சென்றனா்.

அடிபட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆந்தை வெள்ளி ஆந்தை ஆகும். இதன் அறிவியல் பெயா் டைலோ ஆல்பா. இது இதயம் போன்ற வடிவமுடைய வெளிறிய முக அமைப்பைக் கொண்டது. இதன் உடல் பகுதி பழுப்பு மற்றும் வெள்ளை நிற இறகுகளால் ஆனது. இது பொதுவாக இரவு நேரங்களில் வேட்டையாடும் பறவை இனம் என்று வனத்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.