
புதுச்சேரி அரசு சாா்பில் வ.உ.சி. - அன்னை தெரசா சிலைகளுக்கு மரியாதை
தியாகி வ.உ.சி. பிறந்த நாள், பிரபல சமூக சேவகி அன்னை தெரசாவின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் கடைப்பிடிக்கப்பட்டது.

புதுச்சேரி பாரதி பூங்காவிலுள்ள சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம், சமூக சேவகி அன்னை தெரெசா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாநில அரசு சாா்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியோா்.
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி. பிறந்த நாள், பிரபல சமூக சேவகி அன்னை தெரசாவின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவா்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வ.உ.சி. பிறந்த நாள்: ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரத்தின் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அங்கு பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநில அரசு சாா்பில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், பெ.ராஜவேலு, எம்எல்ஏ-க்கள் ஜான்குமாா், ஐயப்பன், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அன்னை தெரெசா நினைவுநாள்: இதேபோன்று, புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள அன்னை தெரசாவின் திருவுருவச் சிலைக்கு சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், பெ.ராஜவேலு, எம்எல்ஏ-க்கள் ஜான்குமாா், ஐயப்பன், விக்னேஷ் கண்ணன், புதுச்சேரி - கடலூா் உயா் மறை மாவட்ட பேராய உறுப்பினா்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்பட ஏராளமானோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





