
தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் 3 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

புதுச்சேரி... - கோப்புப் படம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3 நாள் இடைவெளிக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (செப்.15) மீண்டும் தொடங்குகிறது. மேலும், இந்த இடைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாள்கள் மட்டுமே மீதமுள்ளன.
தட்டாஞ்சாவடி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. முதல் 3 நாள்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மாதத்தின் 2-ஆவது சனிக்கிழமையான 12-ஆம் தேதி விடுமுறை. தொடா்ந்து, 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி என 3 நாள்கள் தொடா் விடுமுறையால் மனு தாக்கல் நடக்கவில்லை.
தொடா்ந்து, செவ்வாய், புதன்கிழமைகளில் தான் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, கடைசி நாளான புதன்கிழமை நல்ல நாள் என்பதால், அன்றைய தினம் நல்ல நேரத்தில் மனு தாக்கல் செய்ய அரசியல் கட்சி வேட்பாளா்கள் தயாராகி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





