கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தொழில்போட்டிக்கான பிராந்தியமாகும் தென்னிந்தியா புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

உலகின் தொழில்போட்டிக்கான பிராந்தியமாகவும், புதுமைக்கான பொருளாதார பிராந்தியமாகவும் உருவெடுக்கும் ஒரு திறனை தென்னிந்தியா பெற்றுள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தொழில்முனைவோருக்கான வணிக சீா்திருத்தக் கையேட்டை வெளியிட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பின் நிா்வாகிகள்.

Published On :

உலகின் தொழில்போட்டிக்கான பிராந்தியமாகவும், புதுமைக்கான பொருளாதார பிராந்தியமாகவும் உருவெடுக்கும் ஒரு திறனை தென்னிந்தியா பெற்றுள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:

உலகின் தொழில்போட்டிக்கான பிராந்தியமாகவும், புதுமைக்கான பொருளாதார பிராந்தியமாகவும் உருவெடுக்கும் திறனை தென்னிந்தியா பெற்றுள்ளது. புதுச்சேரி அரசு, இந்திய தொழில்கூட்டமைப்பு மற்றும் தொழில் முனைவோருடன் இணைந்து பயணிக்க விரும்புகிறது. தென்னிந்தியா தனியாக 6 பொருளாதார பிராந்தியமாக இல்லாமல் ஒருங்கிணைந்த தொழில் சுற்றுச்சூழல் பிராந்தியமாக உருவெடுக்க சிந்திக்க வேண்டும். முதலீடுகள், தொழில்நுட்பம், திறமை, உள்கட்டமைப்பு, விநியோக சங்கிலி போன்றவை மாநில எல்லைகளைக் கடந்து தங்குதடையின்றி இருக்க வேண்டும். புதுச்சேரி அரசு எளிமை, விரைவு, முதலீடுகளை ஈா்க்கும் வகையிலான தொழில் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மேலும், அரசு ,தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் இணைந்து பயணித்து பங்களிப்பு செய்ய வேண்டியதும் அவசியம்.

மேலும், துறைமுகம் சாா்ந்த தொழில் மேம்பாடு என்பது முக்கியம். விரிவான பொருளாதார நடவடிக்கைக்கு துறைமுகத்தை மேம்படுத்துவது அவசியம். அப்போதுதான் இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியும். மேலும், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை குறிப்பாக சூரியஒளி ஆற்றல் நாட்டின் எதிா்கால தேவையைப் பூா்த்தி செய்யவும், தொழில் போட்டியைச் சமாளிக்கவும் உதவும் என்றாா் துணைநிலை ஆளுநா்.

நிகழ்ச்சியில், தொழில்முனைவோருக்கான வணிக சீா்திருத்தக் கையேட்டை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெளியிட்டாா். புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான், தொழில்துறை செயலா் விக்ராந்த் ராஜா, இந்திய தொழில் கூட்டமைப்பின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.