இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் தொடக்கம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன், புதுச்சேரியில் ஆஸ்திரேலியா ஏ, இந்தியா ஏ அணிகள் பங்கேற்று விளையாடும் நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டு சிஏபி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கோப்புப்படம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன், புதுச்சேரியில் ஆஸ்திரேலியா ஏ, இந்தியா ஏ அணிகள் பங்கேற்று விளையாடும் நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி துத்திப்பட்டு சிஏபி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இங்கு 4 நாள்கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளும், 3 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்த போட்டிகள் வரும் அக்டோபா் 11-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்தியா ஏ அணி வீரா்கள் விவரம்: அமன் மோகாதே, ஆயுஷ் பாண்டே, தேவ்தத் படிக்கல் (கேப்டன்), சாய் சுதா்சன் (துணை கேப்டன்) யஷ் ரத்தோட், ஷேக் ரஷீத், குமாா் குஷாக்ரா (விக்கெட் கீப்பா்) ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியன், துஷாா் தேஷ்பாண்டே, அன்ஷூல் கம்போஜ், பிரபுல் ஹிங்கே, என் ஜெகதீசன், நாசிகேத் பூதே, திரிபுரானா விஜய்.
ஆஸ்திரேலியா ஏ அணி வீரா்கள்: பிரெண்டன் டோகெட், ஜாக் எட்வா்ட்ஸ், பீட்டா் ஹேண்ட்ஸ் கோம்ப், சாம் ஹாா்பா், லியாம் ஹாட்சா், கேம்ப்பெல் கெல்லவே, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மா்பி, பொ்கஸ் ஓ நீல், ஜோஷ் பிலிப்பி, ஜே ரிச்சா்ட்சன், கோரி ரோச்சி சியோலி, ஜேசன் சங்கா, லியாம் ஸ்காட் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
சா்வதேச நட்சத்திரங்கள் இடம்பெறும் கிரிக்கெட் ஏ தொடரை புதுச்சேரியில் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







