மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா ஏ அணி!

இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

Published On :

இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. டி20 தொடர் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியில் நீடிக்க, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டும். அதன் பின், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வெல்ல வேண்டும்.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த தொடர் வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான பிரதான டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் போட்டி நவம்பர் 19 தொடங்கி 23 வரையும், இரண்டாவது போட்டி நவம்பர் 27 தொடங்கி டிசம்பர் 1 வரையும் நடைபெறவுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 5-வது இடத்திலும், நியூசிலாந்து அணி 3-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The India A team is set to tour New Zealand to play a three-match Test series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.