எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாணவர்களுக்கான கல்வி விழா

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி விழா வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :5 ஜனவரி 2013, 7:22 pm

தினமணி

 ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை பள்ளியில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட விழாவுக்கு, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.ரங்கநாதன் தலைமை தாங்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் க.அன்பரசு முன்னிலை வகித்தார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் சி.ரகுராமன் வரவேற்ரார். மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒன்றிய சிறப்பாசிரியர் ஏ.கோவிந்தன் விழா நோக்கங்கள் குறித்துப் பேசினார்.

 பின்னர் நடைபெற்ற ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, தவளை ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆசிரியர்கள் சித்ரா, மங்கையற்கரசி, விமலாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி  உதவி ஆசிரியர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.