விழுப்புரம்-திண்டுக்கல் இடைய அமைக்கப்பட உள்ள இருவழி ரயில் பாதைக்காக நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் தொடங்கின.
விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இருவழி ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் பாதை விழுப்புரம் வட்டத்தைச் சேர்ந்த 7 கிராமங்கள் வழியாகவும், உளுந்தூர்பேட்டை வட்டதைச் சேர்ந்த 18 கிராமங்கள் வழியாகவும் செல்கிறது.
இந்த ரயில் பாதைக்காக விழுப்புரம் வட்டத்தில் 14 கி.மீ மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 35 கி.மீ. தொலைவுக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தா தேவி இப்பணிகளைத் தொடங்கி வைத்தார். விழுப்புரம் கோட்டாட்சியர் அனுசுயா தேவி, ரயில்வே உதவி பொதுமேலாளர் ஆர்.தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
நில ஆர்ஜிதப் பணிகள் முடிந்து நிலம் ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டதும், திண்டுக்கல் வரை இரு வழிப்பாதை அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும் இதுபோல் நில ஆர்ஜிதப் பணிகள் நடைபெற்று
வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிளாசன், இஷான் கிஷன் அதிரடி: சிஎஸ்கே தோல்வி!

வெளியானது பெத்தி டிரைலர்!

இன்றைய செய்திகள் - நேரலை!

திரைத் துறை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி! தயாரிப்பாளர் சங்கம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
