டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைக்க்குறிப்பு வெளியீடு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

"இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு அரசு மானியம்'

இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகள் அரசின் மானியம்  பெறலாம் என ஆட்சியர் எம்.லட்சுமி தெரிவித்தார்.

Published On :

இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகள் அரசின் மானியம்  பெறலாம் என ஆட்சியர் எம்.லட்சுமி தெரிவித்தார்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தில் சரவணன் என்பவரது வயலில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்வதில் நவீன தொழில்நுட்பம் குறித்து செயல் விளக்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமி ஆய்வு செய்தார். பின்பு அவர் கூறியது:

மாவட்டத்தில் இந்த ஆண்டு இயந்திரம் மூலம் திருந்திய நெல் சாகுபடி செய்யும் பரப்பினை அதிகரிக்க முடிவுசெய்து, 22,400 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டம் மூலம் அனைத்து வட்டாரங்களிலும் இயந்திர நெல் நடவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பாய் நாற்றங்காலில் தயாரிக்கப்பட்ட நெல் நாற்றுகளை இயந்திரம் மூலம் நடவு செய்த விவசாயிகள், அதற்குரிய ஆவணங்களை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் சமர்ப்பித்தால் ஒரு ஏக்கருக்கு மானியமாக ரூ.1,200 வீதம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இத் திட்டம் மூலம் ஒரு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும் என்றார்.

இதையடுத்து காந்தலவாடி கிராமத்தில் ரவி என்பவரின் வயலில் அமைக்கப்பட்ட பாய் நாற்றங்காலை ஆட்சியர் பார்வையிட்டார்.

உளுந்தூர்பேட்டை: இதேபோல் உளுந்தூர்பேட்டை வட்டாரம் ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி நெல் இயக்கத் திட்டத்தின் கீழ், இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணியினை வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.ரத்தினசபாபதி அண்மையில் ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.