சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்க வலியுறுத்தல்

வருமானத்தில் பின் தங்கிய சிறுபான்மையினருக்கு கல்விக்கடன், தொழில்கடன் வழங்க வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Updated on
1 min read

வருமானத்தில் பின் தங்கிய சிறுபான்மையினருக்கு கல்விக்கடன், தொழில்கடன் வழங்க வேண்டும் என்று சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் 2-வது மாவட்ட மாநாடு புதன்கிழமை விழுப்புரத்தில் நடைபெற்றது. வரவேற்புகுழுத் தலைவர் கே.முகமது அலி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் எம்.ஐ.அலாவுதீன் வரவேற்றார். விழுப்புரம் வட்டத் தலைவர் எஸ்.அப்துல் ஹமீது, விக்கிரவாண்டி பாஸ்டர் கே.காபிரியேல், எம்.எஸ்.ஆர்.தாஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 நலக்குழுவின் மாநிலச் செயலாளர் மூசா, மாநில பொதுச் செயலாளர் ப.மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வுப் பணியில், 17 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழுவுக்குத் தலைவராக வழக்குரைஞர் அலாவுதீனும், செயலாளராக வீ.ராதாகிருஷ்ணனும், பொருளாளராக கே.காபிரியேல், துணைத் தலைவர்களாக கிருஷ்ணமூர்த்தி, பி.சிவலிங்கம், வி.அந்தோணிகுரூஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: புதிய வெளிச்சம் என்ற திட்டத்தின் கீழ் சிறுபான்மையின பெண்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் நோக்கத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுகாதாரம், தூய்மை பாரதம், டிஜிட்டல் கல்வி அறிவு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
 இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வருமானத்தில் பின்தங்கியுள்ளசிறுபான்மை பிரிவினருக்கு கல்விக்கடன், சிறு, குறு தொழில்களில் ஈடுபட உரிய முதலீட்டுக்கடன் ஆகியவை வங்கி மூலமாக வழங்க வேண்டும்.
 மதம் மாறிய தலித் மக்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும். முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள் புதிய வழிபாட்டுத் தலங்களை தங்கள் பட்டா நிலத்தில் அமைத்துக்கொள்ள அனுமதி கோரியும், ஏற்கெனவே உள்ள வழிபாட்டுத் தலங்களை புனரமைக்க, பழுதுபார்க்க அனுமதி வழங்கக்கோரியும் அரசுக்கு அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலந்தாழ்த்துவதும், இழுத்தடிக்கும் போக்கும் தொடர்ந்து நிலவி வருகிறது.
 இதனைத் தவிர்த்து உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். மாவட்டத்தில் சிதிலமடைந்து வரும் சமணர் படுக்கைகள், சமணர் கோயில்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எஸ்.ஷேக்அன்சாரி நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com