மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விழுப்புரம், திண்டிவனத்தில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள்!பொதுமக்கள் அச்சம்

விழுப்புரம், திண்டிவனம் நகரங்களில் அதிகரித்து வரும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.

News image
Updated On :31 ஜூலை 2017, 4:58 am

கே. சுரேஷ்குமார்

விழுப்புரம், திண்டிவனம் நகரங்களில் அதிகரித்து வரும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம், திண்டிவனம் நகரங்களில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவிலான திருட்டு, கொள்ளை, வழிப்பறிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, திண்டிவனம் ஜெயபுரத்தில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி தனியார் நிறுவன ஊழியரான ஜெரோம் என்பவர் வீட்டில் 50 பவுன் நகைகளும், கடந்த 20-ஆம் தேதி, இதே பகுதியிலுள்ள மருத்துவர் கஜேந்திரன்(50) என்பவர் வீட்டில் 250 பவுன் நகைகளும் கொள்ளை போனச் சம்பவங்கள் அந்நகர மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல, கடந்த ஜூலை 25-ஆம் தேதி விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர். நகரில் மளிகைக் கடை உரிமையாளர்அப்துல்சலாம் என்பவரது வீட்டில் 15 பவுன் நகைகளும், கடந்த ஜூலை 16ஆம் தேதி புதுநகர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜவேல் என்பவரின் வீட்டில் 10 பவுன் நகைகளும் திருடுபோயின.

விழுப்புரம் அருகே தனசிங்குமங்கலத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சரஸ்வதி என்பவர் அணிந்திருந்த 12 பவுன் தாலிச் சங்கிலியும் திருடு போயின. மேலும், விழுப்புரம் பூந்தோட்டம் கோயில் விழா, மயிலம் அருகே கோயில் விழா ஆகிய விழாக்களில் பெண்களிடம் நடந்த சங்கிலிகள் பறிப்பு போன்ற சம்பவங்கள் மக்களை கவலைக்குள்ளாக்கி உள்ளன. விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 333 பவுன் நகைகள் திருட்டுபோய் உள்ளன. இதுகுறித்து விழுப்புரம், சேம்பர் ஆஃப் காமர்ஸ் பொருளாளர் கலைமணி கூறியதாவது: திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் கொடுத்தால் வழக்குப் பதிவை தவிர்க்கின்றனர். இயன்றவரை பேசி அனுப்பி வைப்பது அல்லது சிறிய வழக்காக பதிவு செய்வது என்ற அளவில்தான் போலீஸாரின் நடவடிக்கை உள்ளது என்றார்.

விழுப்புரம், கே.கே. நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், நகை வணிகர் ராஜேஷ் ஆகியோர் கூறியதாவது: எப்போது திருட்டு, வழிப்பறி நிகழும் என்று கணிக்க முடியாத அளவுக்கு பீதியில் உறைந்துள்ளனர் மக்கள். வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லவே அச்சமாக உள்ளது. மேலும், வீட்டில் ஆள்கள் இருக்கும்போதே கொள்ளை சம்பவங்கள் நிகழ்வதால் தனியாக மனைவி, குழந்தைகளை வீட்டில் விட்டுச் செல்வதும் அச்சமாகவே உள்ளது.

பொதுமக்களின் உடைமைக்கு தகுந்த பாதுகாப்பினை காவல் துறை ஏற்படுத்தித் தர வேண்டும்.

குற்றச்சம்பவங்களைத் தடுப்பது குறித்து பொதுமக்களிடம் காவல் துறை கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

மாறி வரும் மன நிலை
தமக்கு நேராத வரை எந்தப் பாதிப்பு குறித்தும் பொதுமக்கள் கண்டுகொள்வதில்லை. பக்கத்து வீட்டில் திருட்டு முயற்சி நடந்தாலோ, வீதிகளில் நகைப் பறிப்பு நிகழ்ந்தாலோ அதனை தடுக்கவோ, எதிர்க்கவோ முன்வராத மக்களின் இன்றைய மனநிலை கூட கொள்ளையர்களுக்கு கூடுதல் தைரியத்தைத் தருகிறது. குற்றம் செய்யவும் தூண்டுகோலாகிறது.

தங்களது வீடுகள், வீதிகளை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

குற்றச்சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படும்: எஸ்.பி.
 விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மாவட்டத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இரவு நேர ரோந்து, வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் நிச்சயம் பிடிபடுவர். குற்றச்சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படும்.

அண்மையில் கூட நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த 2 பேரை பிடித்து, 43 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளோம். திண்டிவனம் மருத்துவர் வீட்டில் 250 பவுன் திருட்டு போன சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வழிப்பறியில் ஈடுபடுவோர் அதிக விலை, அதிக சக்தியுடன் இயங்கும் பைக்குகளை பயன்படுத்துகின்றனர். அந்த வகையிலான பைக்குகளை வைத்திருப்பவர்கள் குறித்தும் விசாரிக்கப்பட உள்ளது.

வீட்டைப் பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் வெளியே செல்வோர் காவல் நிலையத்தில் தகவல் கூறினால், தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.