47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

காவல் ஆய்வாளரைக் கண்டித்து, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 3:06 am

தினமணி

காவல் ஆய்வாளரைக் கண்டித்து, உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஷாகுல் அமீது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.ஜெயக்குமார், துணைச் செயலாளர் எம்.கே.பழனி, மாநில அலுவலகச் செயலாளர் எஸ்.செல்வராஜ், ஊ.கீரனூர் செயலாளர் ஆ.ராமராஜ் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வே.ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மாநிலத் தலைவர் எம்.செந்தில், மாநிலச் செயலாளர் எஸ். பாலா, மாநிலப் பொருளாளர் தீபா ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் எஸ்.கணபதி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பூமாலை, மாவட்ட துணைத் தலைவர்கள் வி.மார்த்தாண்டன், ஏ.சுபாஷினி, மாநிலக் குழு நிர்வாகிகள் சதீஷ், சத்யராஜ் உள்ளிட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.