நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

பைக்கில் சென்றவர் கீழே விழுந்து சாவு

கள்ளக்குறிச்சியை அடுத்த தோட்டப்பாடி அருகே பைக்கில் சென்றவர் கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:30 am IST

கள்ளக்குறிச்சியை அடுத்த தோட்டப்பாடி அருகே பைக்கில் சென்றவர் கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த காளசமுத்திரம் கிழக்குக் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்து வந்தவர் பெரியசாமி மகன் ராஜேஷ் (39). இவர், நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், அறுவடை இயந்திரம் பழுதடைந்ததால், அதனை சின்னசேலத்தில் உள்ள பட்டறையில் பழுது நீக்குவதற்காக விட்டிருந்தார். அதனை சீர்செய்து விட்டனரா என்று பார்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் சென்றார். தோட்டப்பாடி அருகே சென்ற போது, சாலையில் நாய் குறுக்கிட்டதால், நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.