எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

விழுப்புரம் மாவட்டத்தில் ரயில் மறியல்: 1,016 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமையும் ரயில், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட திமுக, கம்யூனிஸ்ட், விசிக, நாம் தமிழர் கட்சியினர் 1,016 பேர் கைது செய்யப்பட்டனர். 

Updated On :5 ஏப்ரல் 2018, 8:52 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமையும் ரயில், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட திமுக, கம்யூனிஸ்ட், விசிக, நாம் தமிழர் கட்சியினர் 1,016 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, திமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சியினர் புதன்கிழமையும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். விழுப்புரம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமையில் திரண்ட அந்தக் கட்சியினர், முற்பகல் 11.40 மணிக்கு சென்னையிலிருந்து வந்த சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் தலைமையிலான போலீஸார், மறியல் செய்த 35 பெண்கள் உள்ளிட்ட 150 பேரை கைது செய்தனர்.
திண்டிவனத்தில் திமுக மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தலைமையில், எம்எல்ஏக்கள் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில், குருவாயூர் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 10 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, உளுந்தூர்பேட்டையில் திமுக ஒன்றியச் செயலர் வைத்தியநாதன் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 70 பேரும், திருவெண்ணெய்நல்லூரில் திமுக ஒன்றியச் செயலர் துரைராஜ் தலைமையில் ரயில் மறியல் செய்த 60 பேரும், கள்ளக்குறிச்சியில் திமுக நகரச் செயலர் சுப்பராயலு தலைமையில் சாலை மறியல் செய்த 59 பேரும், சங்கராபுரத்தில் சாலை மறியல் செய்த ஒன்றியச் செயலர் ஆறுமுகம் தலைமையில் 42 பேரும், சின்னசேலத்தில் உதயசூரியன் எம்எல்ஏ தலைமையில் ரயில் மறியல் செய்த 365 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி அருகே மாடூர் சுங்கச்சாவடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜீவானந்தம் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வகையில், மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்ளிட்ட 1,016 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.