விழுப்புரம் மாவட்டத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டங்களில் ஈடுபடும்போது, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல வகைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அறவழியில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 1-ஆம் தேதி போராட்டத்தின் போது, உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வன்முறையில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறும், பொதுச் சொத்து
களுக்கு சேதமும் ஏற்படுத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, கடந்த 5-ஆம் தேதி சின்னசேலம், கள்ளக்குறிச்சி, செஞ்சி ஆகிய பகுதிகளில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி, அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்த 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, போராட்டத்தில் ஈடுபடுவோர் பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துகளுக்கும் பங்கம் ஏற்படாமலும், பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மீறி பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

