முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கோயில் விழா நடத்த எதிர்ப்பு: எஸ்.பி. அலுவலகத்தில் மனு 

செஞ்சி அருகே கோயில் விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர். 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:42 am IST

செஞ்சி அருகே கோயில் விழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 செஞ்சி அருகே பாடிபள்ளம் அடுத்த தின்னலூரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை மாலை எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது: சென்னாலூர் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்துக்கு அருகில் காளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகளாக தின்னலூர் கிராமத்தினர் மூலம் நிர்வகித்து, உற்சவம், வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
 தற்போது, பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இந்த நிலையில், அந்தக் கோயிலில் சென்னாலூர் காலனியைச் சேர்ந்த சிலர் உற்சவம் செய்ய வேண்டும் என பிரச்னை செய்கிறார்கள். இது குறித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.
 தற்போதைய நிலையால், அங்கு அமைதி சீர்குலையும் நிலை உள்ளது. ஆகவே, விசாரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.