திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

உளுந்தூர்பேட்டையில் பாஜக கொடியேற்று விழா

உளுந்தூர்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று  விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:08 am

DIN

உளுந்தூர்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று  விழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. மாவட்ட  (சட்டப்பிரிவு) தலைவர்  எஸ்.சத்தியசீலன் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் சௌ.பக்கிரிசாமி, கோதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகி க.குருமூர்த்தி வரவேற்றார்.
விருத்தாசலம் சாலை  சந்திப்பில்  கட்சிக்கொடியை மாநில பொதுச்செயலர்  மாவீரன் கருப்பு (எ) முருகானந்தம் ஏற்றி வைத்து பேசினார் . 
அவர் பேசுகையில், அடுத்த மாதம் இறுதிக்குள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தி, காவிரி  நீர் தமிழகத்துக்கு  கிடைக்க  வழிவகை செய்யும். அதேபோல விவசாயிகளின் பிரச்னையையும் தீர்த்து வைக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஒபிசி அணி மாநில துணைத் தலைவர் கே.மனோகரன், கோட்ட இணை பொறுப்பாளர் வி.அருள், மாவட்ட நிர்வாகிகள் ராமர், தாமோதரன்,  முருகானந்தம், ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கஜேந்திரன் உட்பட கட்சி  நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நகர துணை தலைவர் மருது நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.