செஞ்சியை அடுத்க அப்பம்பட்டு கிராமத்தில் மதுக்கடை பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
அப்பம்பட்டில் இயங்கி வரும் மதுக்கடையின் பின்புறம் தனியாருக்குச் சொந்தமான தரைக்கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து அனந்தபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







