திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம், துரிஞ்சிப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், வீதியோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புதன்கிழமை கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சார்-ஆட்சியர் சாருஸ்ரீ பங்கேற்று, கிராமப்புற மக்களின் முன்னேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்துப் பேசினார்.
அப்போது, வீதிகளில் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும். தனிநபர்கள் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி, அனைத்து வீதிகளிலும் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
வட்டாட்சியர் ப.செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் ஏழுமலை, ஊராட்சிச் செயலர் கே.மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.