திருக்கோவிலூர் கிளை நூலகத்துக்கு மின் சேமிப்புக் கலன் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் சிங்கார.உதியன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் விளந்தை அ.சண்முகம், முனைவர் வீர.நாராயணன், மாவட்ட நலக் கல்வியாளர் ப.அன்புநிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர் (பொ) இரா.சுப்பிரமணியன் வாசிப்பின் அவசியத்தை விளக்கிப் பேசினார்.
திருக்கோவிலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்
கு.கல்யாணகுமார், நூலகப் பயன்பாட்டுக்கு நன்கொடையாக ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மின் சேமிப்புக் கலன் வழங்கினார்.
மாவட்ட நூலக அலுவலக பதிவறை உதவியாளர் த.சர்வர்கான் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் வெ.ஆனந்தி நன்றி
கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எத்தனால் கலப்பு எரிபொருள்: நுகா்வோா்களை பாதிப்பதாக கேஜரிவால் குற்றச்சாட்டு

இளம் வாசகா்களின் எண்ணிக்கையிலேயே நாட்டின் எதிா்காலம் பிரதிபலிக்கிறது: அமித் ஷா

மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!






