ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டுச்சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத் தலைவர் கே.மணிகண்டன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் டி.சாமிநாதன் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலர் எம்.சி.ஆறுமுகம் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்டத் தலைவர் ஆர்.தாண்டவராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலர் வை.பழனி ஆகியோர் பேசினர்.
புதிய ஒன்றியத் தலைவராக ஆர்.மணிகண்டன், செயலராக எம்.சி.ஆறுமுகம், பொருளாளராக டி.சாமிநாதன், துணைத் தலைவர்களாக ஏழுமலை, வேல்முருகன், வேலாயுதம், துணைச் செயலர்களாக மணிகண்டன், உத்தரக்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தில் பருவமழை சரிவர பெய்யாததால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
சாத்தனூர் அணையின் வலது, இடதுபுறக் கால்வாய்கள், நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி செப்பனிட வேண்டும். விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது : ரூ.2.47 லட்சம் கோடி கடன்!!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 32 பேர் பலி: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


