டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வாகனத் தணிக்கையின் போது போலீஸாரின் செயல்பாட்டை மேம்படுத்த ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையினர் பொதுமக்களை அணுகுவதில் ஏற்படும் குறைகளைக் களைவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:15 am

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் காவல் துறையினர் பொதுமக்களை அணுகுவதில் ஏற்படும் குறைகளைக் களைவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை, வாகனத் தணிக்கையின் போது போலீஸார் நடத்தும் விதத்தில் குறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுபோன்ற சூழலில், காவல் துறையினரிடம் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு என்ன? என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்டக் காவல் தலைமையகத்தில் உள்ள கூட்ட அரங்கல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.  ஏ.டி.எஸ்.பி.  ராஜராஜன், குற்றத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டி.எஸ்.பி.க்கள் சங்கர், வீமராஜ், கோமதி, இளங்கோவன், திருமால், ராஜேந்திரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராமமூர்த்தி,  சிறு - குறு தொழில் முனைவோர் சங்கத் தலைவர் அம்மன் கருணாநிதி, மனோ தத்துவ நிபுணர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு காவல் துறையினர் பொதுமக்களைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.
கூட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராமமூர்த்தி பேசியதாவது:
போலீஸார் பொதுமக்களை சாலை போன்ற பொது இடங்களில் கையாள்வதில் பலவீனம் உள்ளது. அதனைச் சீர்படுத்த வேண்டும். தொழில்நுட்பத் துறை வளர்ச்சியால் சட்டங்கள், உரிமைகளை பொதுமக்கள் நன்கு அறிந்து வருகின்றனர். ஆகவே, சட்டப்படி நடத்துவற்கு காவல் துறையினர் முன் வரவேண்டும். அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போலீஸாரை அணுகும் போது, அவர்களுடன் பேசும் போது முறையாகப் பேச வேண்டும். 
அதே போல, பொதுமக்களும் காவல் துறையினர் சட்டப்படி செயல்பட ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றார் அவர். தொழில் துறையினர், வியாபாரிகள், பொதுமக்களைக் காவல் துறையினர் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என அம்மன் கருணாநிதி வலியுறுத்தினார்.
முறையான ஓய்வில்லாத பணியாக காவல் பணி உள்ளது. பல்வேறு நெருக்கடிகளைக் கொண்ட பணிதான் என்றாலும் காவலர்கள் இன்முகத்துடன் இருக்கப் பழக வேண்டும். தியானம் போன்றவற்றில் போலீஸார் ஈடுபட வேண்டும் என்றார் மனோ தத்துவ நிபுணர் மணிகண்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.