மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ரயில்வே மேம்பாலப் பணி நிறைவடையாதது ஏன்? ஆட்சியர் விளக்கம் 

விழுப்புரம், காட்பாடி வழி ரயில்வே கடவுப்பாதை மேம்பாலப் பணி, கான்கிரீட் கட்டைகள் தொடர்பான ஐ.ஐ.டி. ஆய்வின் முடிவு கிடைக்கப் பெறாததாலேயே தாமதமாகி வருவதாக மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 3:28 am

தினமணி

விழுப்புரம், காட்பாடி வழி ரயில்வே கடவுப்பாதை மேம்பாலப் பணி, கான்கிரீட் கட்டைகள் தொடர்பான ஐ.ஐ.டி. ஆய்வின் முடிவு கிடைக்கப் பெறாததாலேயே தாமதமாகி வருவதாக மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காட்பாடி வழி ரயில்வே கடவுப் பாதை மீது மேம்பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஜனவரி மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று மாவட்ட நிர்வாகத்தால் கூறப்பட்டு வந்த நிலையில், பணி நிறைவடையாததால் நகர மக்கள், வாகன ஓட்டிகள் அவதியுறுவது தொடர்கிறது.
 இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த மேம்பாலப் பணியை கடந்த டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு, அதிகாரிகளை முடுக்கி விட்டேன். மேம்பாலப்பணிக்கான கான்கிரீட் கட்டைகள் தயாரிக்கப்பட்டு ஐ.ஐ.டி.க்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வு முடிவு கிடைத்த பிறகே அடுத்தக் கட்டப் பணியை தொடர முடியும். ஆய்வு முடிவு கிடைத்தவுடன், மேம்பாலப் பணி விரைந்து நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார் ஆட்சியர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.