பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வரஞ்சரம், கரியாலூரில் புதிய காவல் நிலைய கட்டடங்கள் திறப்பு

கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டத்துக்கு உள்பட்ட வரஞ்சரம், கரியாலூர் காவல் நிலையக் கட்டடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து

News image
Updated On :5 ஜூன் 2018, 5:00 am

DIN

கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டத்துக்கு உள்பட்ட வரஞ்சரம், கரியாலூர் காவல் நிலையக் கட்டடங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திங்கள்கிழமை திறந்து வைத்தார். 
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வரஞ்சரம் காவல் நிலைய கட்டடம் சிதிலமடைந்து விட்டதால், அதனை இடித்து விட்டு, அந்த இடத்திலேயே புதிய காவல் நிலையம் ரூ.56.26 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.
புதிதாக கட்டப்பட்ட இந்த காவல் நிலையத்தை முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார். அப்போது, வரஞ்சரம் காவல் நிலையத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீ.ஜெயக்குமார் குத்துவிளக்கேற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். 
உடன் கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் வி.கோமதி, காவல் ஆய்வாளர் தங்க.விஜய்குமார், காவல் உதவி ஆய்வாளர்கள், கதிரவன், பாலமுரளி மற்றும் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் வி.அய்யப்பா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். 
அதே போல, கல்வராயன்மலைப் பகுதியில் அமைந்துள்ள கரியாலூரில் ரூ.27 லட்சத்தில் கட்டி முடித்து, முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட புதிய காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் த.ரஜினிகாந்த் குத்துவிளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். காவல் உதவி ஆய்வாளர் கிள்ளிவளவன் உள்ளிட்ட காவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.