பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சின்னசேலம் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்

அரசியல் கட்சியினரின் புகாரைத் தொடர்ந்து, சின்னசேலம் காவல் ஆய்வாளர் கணபதி ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :5 ஜூன் 2018, 5:03 am

DIN

அரசியல் கட்சியினரின் புகாரைத் தொடர்ந்து, சின்னசேலம் காவல் ஆய்வாளர் கணபதி ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சின்னசேலம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கணபதி. இந்த காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் வாகனத் தணிக்கை என்ற பெயரில், முறைகேடுகள் செய்து, லஞ்சம் பெறுவதாகவும், பொதுமக்களை கடும் வார்த்தைகளால் பேசுவதாகவும், அரசியல் கட்சியினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கூறி, கடந்த வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை சந்தித்து, காவல் ஆய்வாளர் கணபதி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சியினர் மனு அளித்தனர்.
இதுகுறித்து விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சின்னசேலம் காவல் ஆய்வாளர் கணபதி மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.க்கு பரிந்துரைத்தார். 
இதனை பரிசீலித்த டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் சின்னசேலம் காவல் ஆய்வாளர் கணபதியை விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.