காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

இரு சக்கர வாகனம் - லாரி மோதல்: கல்லூரி மாணவர் சாவு

மயிலம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

மயிலம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
 திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் மகன் விக்னேஷ்(21). மயிலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மெக்கானிக்கல் பிரிவில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். திங்கள்கிழமை பகல் 12 மணி அளவில், கூட்டேரிப்பட்டில் இருந்து மயிலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
 கொல்லியங்குணம் என்ற பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 சடலத்தை மயிலம் போலீஸார் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.