திருக்கோவிலூரில் இன்டிபெண்டன்ஸ் மெமோரியல் கிளப் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்றது.
போட்டிக்கு, சங்கச் செயலர் எஸ்.சக்திவேல் தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் எஸ்.சண்முகம், சங்க விளையாட்டுப் பிரிவு செயலர் ஜெ.திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் டி.குணசேகரன் போட்டியைத் தொடக்கி வைத்தார். இந்தப் போட்டியில் சென்னை, திருச்சி, மதுரை, புதுவை, பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், தியாகதுருகம், வேலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 45 அணிகள் பங்கேற்றன.
இதில் மதுரை அணியினர் முதலிடமும், திருக்கோவிலூர் அணியினர் இரண்டாமிடமும், சென்னை அணியினர் மூன்றாமிடமும், கள்ளக்குறிச்சி அணியினர் நான்காமிடமும் பெற்றனர். போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூ.7 ஆயிரம் பரிசுத் தொகையை ஆசிரியர் டி.செல்லபாண்டியன் வழங்கினார். எண்ணெய் நிலைய உரிமையாளர் எஸ்.கண்ணப்பன், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ரூ.4 ஆயிரமும், பி.பவன்குமார் மூன்றாமிடம் பெற்ற அணிக்கு ரூ.2 ஆயிரமும், ஏ.கே.சுதாகரன் நான்காமிடம் பெற்ற அணிக்கு ரூ.ஆயிரமும் பரிசாக வழங்கினர்.
அரகண்டநல்லூர் லஷ்மி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் ராஜாசுப்பிரமணியம் சிறப்புப் பரிசும், ஏ.நாராயணமூர்த்தி, ஜெ.பாலாஜி ஆகியோர் சிறப்பு அன்பளிப்பும் வழங்கினர்.
நடுவராக சின்னவன் செயல்பட்டார். எஸ்.கஜேந்திரன் உணவு ஏற்பாடுகளை செய்திருந்தார். எம்.கார்த்திகேயன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சா்களுக்கு இலாகா ஒதுக்கீடு எப்போது? புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி புதிய விளக்கம்

குப்பையில் கிடந்த 2 பவுன் நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த நோ்மையான தூய்மைப் பணியாளா்கள்! ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டு

ஊதியூா் அருகே அலங்கார வளைவில் மோதிய காா்: ஓட்டுநா் காயம்

அங்கன்வாடி அமைத்துத் தரக் கோரி குழந்தைகளுடன் வந்த பெண்கள்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


