ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

விழுப்புரத்தில் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :29 மார்ச் 2018, 3:19 am

விழுப்புரத்தில் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம், மாவட்ட ஆட்சியரம் எதிரே நடைபெற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வீரப்பன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் வரவேற்றார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். 21 மாத ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்கள் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். நிர்வாகிகள் சேகர், பிரகாஷ், குப்பன், கோபி, முருகவேல், சங்கர், பாலன், உமாராணி, மகேஸ்வரி, அலமேலு, மீனா, சித்ரா, சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.